கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்?


இரவு நன்றாக தூங்கினால் காலை நேரத்தில் பலருக்கும் கண்களில் புரை வந்து விடும். அதனை எடுப்பதற்காக கண்களை கசக்கினால், கண்கள் சிவந்து காணப்படும். இன்னும் ஒருசிலர் அழுது விடுவார்கள். ஏன் தெரியுமா? கண்களை கசக்கும் போது சுகமாக இருக்கிறது என்று பலரும் அழுத்தமாக கசக்கி விடுவார்கள்.

எனது தோழியும் அழகுக்கலை நிபுணருமான செல்வி.சுவீதா (பாளையங்கோட்டை), கண்களை பாதுகாக்கவும், கண்கள் அழகாகவும் எனக்கு சொன்ன சில டிப்ஸ்கள்... உங்களுக்காக...!!!

* ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை பளீர் என்று பிரகாசிக்கச் செய்ய ஒரு பஞ்சு உருண்டையை பன்னீரில் நனைத்து மூடிய கண்களின் இமைகள் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

* கண்களை மசாஜ் செய்வதற்கு உங்கள் மோதிர விரலையே உபயோகியுங்கள். அதுதான் கண்களைச் சுற்றியுள்ள மெல்லிய சருமத்திற்கு அதிகப்படியான அழுத்தத்தைத் தராது.

* டி.வி. பார்க்கும் போது உங்கள் கண்களுக்கும் டி.வி. பெட்டிக்கும் குறைந்தபட்சம் 7 அடிதூரம் இடைவெளி இருப்பது உங்கள் கண்களுக்கு நல்லது. இல்லாவிடில் கண்பார்வை பாதிக்கப்படும்.

* படிக்கும் போது உங்கள் கண்களுக்கும், புத்தகத்துக்கும் இடையில் குறைந்தபட்சம் இரண்டடி இடைவெளி இருக்க வேண்டியது உங்கள் கண்களின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது.

* உஷ்ணத்தால் எரியும் கண்களைக் குளிரவைக்க ஐஸ்வாட்டரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையை உங்கள் மூடிய கண்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

* ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை புத்துணர்வு பெறச்செய்ய, சிறிது உப்பு கரைத்த நீர் நிறைந்த கிண்ணத்தை கண்ணோடு ஒட்டி வைத்து இந்தக் கரைசலுக்குள் விழியை முக்கி கண்களைத் திறந்து, கண் விழியை இடமும், வலமும், மேலும் கீழுமாக உருட்டவும். இது கண்களில் உள்ள அழுக்கு, தூசு ஆகியவற்றை அகற்றி விடும்.

* கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்க தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்கவும். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவும். படுக்கும் முன் தினமும் வைட்டமின்ணி எண்ணெயை கண்ணைச் சுற்றி மசாஜ் செய்யவும். மலச்சிக்கலைத் தவிர்க்கவும்.

* கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்ட பின் கழுவவும்.

* பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.

4 comments:

கிரி said...

//கண்களை கசக்கும் போது சுகமாக இருக்கிறது என்று பலரும் அழுத்தமாக கசக்கி விடுவார்கள்.//

நெம்ப ஓவரா இருக்கே!

"சைட்" அடிப்பதால் கண்ணுக்கு பாதிப்பு உண்டா! :-)

லொள்ளு சபா உபயோகமான செய்தி கூறி இருக்கீங்க.. நன்றி

லொல்லு சபா said...

//"சைட்" அடிப்பதால் கண்ணுக்கு பாதிப்பு உண்டா! :-)//

ரொம்ப லொல்லுதான் கிரிக்கு...!

சைட் அடிப்பதால் எந்த பிரச்சினையும் இல்லீங்க. கண்ணுக்கு ரொம்ப நல்லதுதான்னு ஸ்ரீலஸ்ரீசெந்திலானந்த சுவாமிகள் சொல்லிருக்கார்.

ஊர்சுற்றி said...

நல்ல தகவல்கள்.... உபயோகமானவையும் கூட..

//* பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.//

பாதாம் பருப்பு கையில கிடைச்சா எடுத்து வாயில போடுவோமா... இப்படி ஊறவைத்து அரைத்து... என்னா பேசுறீங்க நீங்க!!! :))))))

லொல்லு சபா said...

//பாதாம் பருப்பு கையில கிடைச்சா எடுத்து வாயில போடுவோமா... இப்படி ஊறவைத்து அரைத்து... என்னா பேசுறீங்க நீங்க!!! :))))))//

நானும் இன்று வரை பாதாம் பருப்பை வாயிலதான் போட்டுட்டு இருக்கேன். அட்வைஸ்லாம் மத்தவங்களுக்குத்தானு சொல்வாங்க இல்லியா? ஹி ஹி.

Post a Comment

உங்கள் கருத்துக்களை நாகரீகமான முறையில் தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்.