ஜே.கே.ரித்தீஷூக்கு கருணாநிதி கண்டிப்பு : பிளாஷ் நியூஸ்


சாதாரண டீக்கடைக்காராக இருந்து பின்னர் எப்படி எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு (?) சினிமாவிலும் நுழைந்து ஒருவழியாக தனது இலக்கான அரசியலில் களமிறங்கி, மக்கள் ஆதரவுடன் (?) பதவியும் பெற்று கலக்கிக் கொண்டிருக்கிறார் அதிரடி நாயகன் ஜே.கே.ரித்தீஷ்.

ரித்தீஷ் எம்.பி. ஆவதற்கு முன்பு ராமநாதபுரம் தொகுதி மக்கள் எல்லோரும் அவரை பாராட்டினார்களோ இல்லியோ... இப்ப பாராட்டிக்கிட்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் இந்த வீரத்தளபதியின் அதிரடிதான். ஜே.கே.ரித்தீஷ் கடந்த வாரம் அங்குள்ள லோக்கல் கேபிள் டி.வி.,யில் அதிரடியாக ஒரு நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்து, அதன் மூலம் பொதுமக்களின் பிரச்‌சினைகளுக்கு உடனடி தீர்வு காண வழிவகுத்தார். இதுதொடர்பான செய்தி இன்றைய தினமலரில் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியை படிச்சதும்... அடடா பரவாயில்லியே நம்ம ரித்தீஷ் கலக்குறாரு என நினைத்த நான் உடனடியாக ராமநாதபுரத்தை சேர்ந்த என் நட்பு வட்டாரத்தில் வீரத்தளபதியின் வீர நடவடிகைகள் பற்றி விசாரிச்சேன். அப்போது நண்பர் சொன்ன தகவல்களை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

உண்மையிலேயே ரித்தீஷ் எம்.பி.ஆனதுக்கு நாங்க ரொம்ப பெருமைப்படுறோம். போன வாரம் சனிக்கிழமை (6ம்தேதி) ஈவினிங் லோக்கல் டி.வி.யில 3 மணி நேரம் லைவ் டெலிகாஸ்ட் புரோகிராம் நடந்தது. ரித்தீஷிடம் பொதுமக்கள் பேசலாம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட அந்த புரோகிராமில் பலர் பேசினார்கள். மூணு மணி நேரமும் முதல்வன் படம் பார்த்த மாதிரியே இருந்திச்சி.

எங்க ஏரிவுக்கு தண்ணீ வரவே ஒரே ஏரியாவுல இருந்து நாலைஞ்சு கால்கள் வநதன. அதுவரைக்கும் சிரிச்சுக்கிட்‌டே பதில் சொன்ன ரித்தீஷ், ‌கடுப்பாகி... உங்க ஏரியா கவுன்சிலர் இன்னும் கொஞ்சம் நேரத்துல இங்க வருவார். அவரிடமே நீங்க கேளுங்க என்றார். என்ன ஆச்சர்யம்... சற்று நேரத்திற்கெல்லாம் கவுன்சிலர் லோக்கல் டி.வி.க்குள் ஆஜர். அடுத்து தண்ணீர் பிரச்சி‌னை குறித்து ஒரு கால். அந்த காலை அட்டர்ன் பண்ணியவர் கவுன்சிலர். நாளைக்கே சரி செய்து விடுகிறேன் என்று பதில் சொன்னார் கவுன்சிலர். அப்போது இடைமறித்த ரித்தீஷ், நாளைக்கு உங்களால சரி பண்ண முடியுமா? என்று கவுன்சிலரிடம் கேட்டதுடன், நாளைக்கு சரி பண்ணலன்னா எல்லாரும் சேர்ந்து இந்த கவுன்சிலர அடிங்க...!ன்னு சிரிச்சுட்டே ‌சொன்னார். நொந்து போன கவுன்சிலர்... சார்... பத்து நாளுல எங்க ஏரியாவுல தண்ணீர் பிரச்சினை இல்லாம பார்த்துக்கிறேன்... என்றார். இத மொதல்லயே சொல்ல வேண்டியதுதானே..!ன்னு ரித்தீஷ் பஞ்ச் பேசினார்.

அடுத்து ஒரு கல்லூரியில் பீஸ் கட்ட முடியாத மாணவர் பேசினார். பீஸ் கட்ட வசதி இல்லன்னு சொன்னார். உடனே அந்த கல்லூரி முதல்வரிடம் போனில் பேசிய ரித்தீஷ் மாணவனுக்கான பீஸை தானே கட்டுவதாக உறுதி கூறினார். இப்படி பல மாணவர்களுக்கு உதவி செய்தார். அடுத்தடுத்து கால்கள் வந்துகொண்டேஇருந்தன. அனைத்திற்கு ரித்தீஷ் பொறுமையுடன் பதில் சொன்னார். கடைசியில் ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறேன். பொதுமக்கள் என்னுடன் போனில் பேசி தங்களது பிரச்சினைகளை தெரிவிக்கலாம் என்று சொன்ன ரித்தீஷ், தனது ‌பர்சனல் செல்நம்பர், வீட்டு நம்பர், ஆபீஸ் நம்பர், அடரஸ் என எல்லாவற்றையும் வழங்கினார்.

நிகழ்ச்சி முடியும் தருவாயில், ஒரு முதியவர் வந்து சார்... என்றார். ரித்தீஷும்... என்ன ஐயா..., என்று கேட்டார். அந்த பெரியவர், ஐயா... நான் இந்த லோக்கல் டி.வி.,யில் செக்யூரிட்டியா வேலை பார்க்குறேன். எனக்கு சரியா சம்பளம் தர்றது இல்ல. என்னோட பேத்தி படிப்பு செலவுக்கு பணம் தேவைப்படுது... என்று அடுத்தடுத்து கோரிக்கைகளையும், புகார்களையும் அடுக்கிக் கொண்டே போனாராம். அப்போது இடைமறித்த ரித்தீஷ்... இதே என் பக்கத்துலதானே உங்க ஓனர் இருக்கார். அவரிடமே சம்பளம் கேளுங்க... என்று கேமராவை கேபிள் டி.வி., ஓனர் பக்கமா திருப்பச் சொன்னார். என்ன செய்‌வதென்று தெரியாமல் நெழிந்தார் கேபிள் ஓனர். கடைசியாக... செக்யூரிட்டியின் பேரன் படிப்புச் செலவுக்கு பணம் கொடுத்து உதவினார் ரித்தீஷ்.

ரித்தீஷ் இப்படி அதிரடியாக கலக்கிக் ‌கொண்டிருக்கும் தகவல் கிடைத்ததும் முதல்வர் கருணாநிதி ரொம்பவே நொந்து விட்டாராம். கடுப்பான அவர், ரித்தீஷை போனில் கூப்பிட்டு கண்டித்ததாக ராமநாதபுரத்தில் தகவல்கள் கசிந்திருக்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட விழாவினை முன்னிட்டு பத்திரிகைகளுக்கு கொடுத்த விளம்பரத்தில் ரித்தீஷின் பெயர் இடம்பெறவில்லை. (ஒரு தொகுதியில் அரசு விழா நடக்கும்போது லோக்கல் எம்.பி.,யின் பெயர் அரசு விளம்பரங்களில் இடம்பெற வேண்டும் என்று ஒரு விதி உண்டாம். அது எதிர்க்கட்சி எம்.பியாக இருந்தாலும் சரி...!)

அடுத்த மாதம் ரித்திஷின் லைவ் புரோகிராம் இருக்குமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது. பதிவுலக நண்பர்களே... அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதற்காக இப்படி நல்லது செய்பவர்களையும் கண்டிப்பது எந்த வகையில் நியாயம்?

23 comments:

கிரி said...

//பத்து நாளுல எங்க ஏரியாவுல தண்ணீர் பிரச்சினை இல்லாம பார்த்துக்கிறேன்... என்றார். இத மொதல்லயே சொல்ல வேண்டியதுதானே..!ன்னு ரித்தீஷ் பஞ்ச் பேசினார்.//

ஹா ஹா ஹா ..இதே மாதிரி ரித்தீஷ் என்னைக்கு மாட்ட போறாரோ..

//ஐயா... நான் இந்த லோக்கல் டி.வி.,யில் செக்யூரிட்டியா வேலை பார்க்குறேன். எனக்கு சரியா சம்பளம் தர்றது இல்ல. என்னோட பேத்தி படிப்பு செலவுக்கு பணம் தேவைப்படுது... என்று அடுத்தடுத்து கோரிக்கைகளையும், புகார்களையும் அடுக்கிக் கொண்டே போனாராம்//

அடுத்த மாதம் நம்ம லைவ் க்கு ...என்று கூறியவுடன் அந்த கேபிள் டிவி ஓனர் தலை தெறிக்க ஓடி விடுவார்.... அப்புறம் அங்கே வேலை செய்கிறவங்க லைன் கட்டி நிற்க ஆரம்பித்து விடுவாங்க..... ஹி ஹி

// அடுத்த மாதம் ரித்திஷின் லைவ் புரோகிராம் இருக்குமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது. பதிவுலக நண்பர்களே. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதற்காக இப்படி நல்லது செய்பவர்களையும் கண்டிப்பது எந்த வகையில் நியாயம்?//

நல்லா கேட்கறாங்கய்யா டீடைலு...... அனேகமாக இன்னும் கொஞ்ச நாள்ல கலைஞர் வீட்டுல ரித்தீஷ்க்கு லைவ் ப்ரோக்ராம் நடக்க போகுது :-))))

சரவணகுமரன் said...

//கலைஞர் வீட்டுல ரித்தீஷ்க்கு லைவ் ப்ரோக்ராம் நடக்க போகுது //

:-))

Unknown said...

அதெல்ல்லாஞ்சரி... இது காமெடி பதிவா இல்ல உண்மையிலேயே நடந்ததா? ஏனென்றால் இது நம்ம ”அண்ணன்” மேட்டராச்சே!! :))))))))))))

ஊர்சுற்றி said...

//அதெல்ல்லாஞ்சரி... இது காமெடி பதிவா இல்ல உண்மையிலேயே நடந்ததா? ஏனென்றால் இது நம்ம ”அண்ணன்” மேட்டராச்சே!! :))))))))))))//


ரிப்பீஈஈஈஈஈட்ட்ட்டேய்....

நானும் விசாரிக்கிறேன்.

லொல்லு சபா said...

//கிரி said...
அந்த கேபிள் டிவி ஓனர் தலை தெறிக்க ஓடி விடுவார்//

நடந்தாலும் நடக்கலாம்.

லொல்லு சபா said...

//சரவணகுமரன் said...

//கலைஞர் வீட்டுல ரித்தீஷ்க்கு லைவ் ப்ரோக்ராம் நடக்க போகுது //

:-))//

புன்னகை கருத்துக்கு நன்றி சரவண குமரன்.

லொல்லு சபா said...

//Vijay said...

அதெல்ல்லாஞ்சரி... இது காமெடி பதிவா இல்ல உண்மையிலேயே நடந்ததா? ஏனென்றால் இது நம்ம ”அண்ணன்” மேட்டராச்சே!! :))))))))))))
//

விஜய் மற்றும் ஊர் சுற்றிக்கு... இது காமெடி சபா அல்ல... நாட்டு நடப்புகளை அலசும் சபா...! ஜே.கே.ரித்தீஷ் பற்றிய இந்த செய்தி முற்றிலும் உண்மை.

ஊர்சுற்றி said...

நன்றி.

அடுத்த மாதம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த முயற்சி தடுத்துநிறுத்தப்பட்டது உண்மையென்றால், கழக உடன்பிறப்புக்கள் இதுபற்றி தலைமையை நோக்கி கேள்விக்கணைகளை வீசுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

Unknown said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்

என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Vishnu - விஷ்ணு said...

//அதற்காக இப்படி நல்லது செய்பவர்களையும் கண்டிப்பது எந்த வகையில் நியாயம்? //

அது தானே அரசியல். சினிமா ஹிரோவா இருக்கிறவரு நிஜ ஹிரோவா ஆயிட்டா கொஞ்சம் பயம் தான்.

Sathya said...

எங்க தலயோட ப்ரோக்ராம் அடுத்த மாசமும் கண்டிப்பா நடக்கும்னு எதிர்பார்க்கிறேன்!!!

லொல்லு சபா said...

//விஷ்ணு said...

நிஜ ஹீரோவா ஆயிட்டா கொஞ்சம் பயம்தானே...//

கொஞ்சமல்ல.. ரொம்‌பவே பயம் அவங்களுக்கு.

Sharah said...

அனேகமாக இன்னும் கொஞ்ச நாள்ல கலைஞர் வீட்டுல ரித்தீஷ்க்கு லைவ் ப்ரோக்ராம் நடக்க போகுது :-))))

Sharah said...

Am Assure, Next Time(Election) He Won't Get Seat... :)

Bala said...

Thalai pol varuma

லொல்லு சபா said...

// Sathya said...

எங்க தல ப்ரோகிராம் அடுத்த மாசமும் கண்டிப்பா நடக்கும்னு எதிர்பார்க்கிறேன்!!//

நானும் அதத்தான் எதிர்பார்க்கிறேன். சேம் டூ யூ.

Unknown said...

நிச்சயமாக பாரப்படவேண்டிய நிகழ்வு.. கருணாநிதி கண்டித்தார் , என்பதற்காக திரு.ரித்தீஸ் தனது பாணியை ,முடிவை... மாற்றிக்கொள்ளகூடாது.. கருணாநிதி கண்டித்தார் என்பது ...வதந்தி அல்லாமல் உண்மையா இருக்குமென்றால்... கருணாநிதி , எங்கே திரு.ரித்தீஸ் தனது வாரிசுகளை தாண்டி புகழ் அடைவாரோ என்று பயபடுகிறார் என்றுநினைக்கின்றேன்

லொல்லு சபா said...

ஸ்பைஸ் மற்றும் பி.எஸ்.க்கு நன்றி!

லொல்லு சபா said...

// பேரரசன் said...

எங்கே திரு.ரித்தீஸ் தனது வாரிசுகளை தாண்டி புகழ் அடைவாரோ என்று பயபடுகிறார் என்றுநினைக்கின்றேன்//


எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது பேரரசன்.

கும்மாச்சி said...

இந்த ரித்தீஷ் கவனிக்க வேண்டியவர்தான்.

கலையரசன் said...

வாழ்த்துக்கள் ரித்தீஷ்...
லொள்ளு சபாவுக்கு ஒரு ராயல் சலீயூட்
தெரிஞ்சி செஞ்சாரோ தெரியாம செஞ்சாரோ
கண்டிப்பாக நல்லது செஞ்சிருக்கார்...
பாராட்டுவோம்!!

புதிய இடுகை இட்டுள்ளேன், வந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...
http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html

லொல்லு சபா said...

//கும்மாச்சி said...

இந்த ரித்தீஷ் கவனிக்க வேண்டியவர்தான்.///

கண்டிப்பாக கும்மாச்சி..! நீங்கல்லாம் கவனிக்கணும்னுதா‌னே இந்த பதிவையே எழுதினேன்.

லொல்லு சபா said...

//லொள்ளு சபாவுக்கு ஒரு ராயல் சலீயூட்//

நன்றி கலையரசன்.

//நல்லது செஞ்சிருக்கார்...
பாராட்டுவோம்!!//

எல்லோரும் ‌சேர்ந்து பாராட்டுவோம்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை நாகரீகமான முறையில் தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்.