பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! கண்டிப்பா படியுங்க!!


முதலில் நடுத்தரவர்க்க குடும்பத்தை ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சண்டையின் உரையாடலை படியுங்கள்..!

மகள் : அம்மா எங்க காலேஜ்ல டூர் போறோம். எனக்கு ஆயிரம் ரூபாய் வேணும். எங்க க்ளாஸ்ல எல்லோரும் ஒரே மாதிரி டிரஸ் எடுக்கப் போறோம். அதுக்கு 500 ரூபாய் வேணும்.

தாய் : சும்மா... சும்மா... பணம்... பணம்னு கேட்டு நச்சரிக்காதே..! பொம்பள புள்ளய காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சிட்டு இருக்கிறதே பெரிய விசயம்.

மகள் : எனக்கு நாளைக்கு பணம் வேணும். இல்லாட்டி அவ்வளவுதான்!

தாய் : அதெல்லாம் தர முடியாது. என்ன செய்வியோ செஞ்சிக்கோ...!

மகள் : என்ன நீ...! பெத்த பொண்ணு சந்தோஷமா டூர் போறதுக்கு கூட பணம் தர மாட்டேங்கிற...! இந்த சந்தோஷத்த கூட தர முடியாத நீ எதுக்கு என்னை பெத்த(?)

தாய் : ஏன்டீ சொல்ல மாட்டே...! ஒன்ன பத்து மாசம் கஷ்டப்பட்டு சொமந்து பெத்து வளர்த்ததுக்கு நல்லா கேட்குற கேள்வி.

மகள் : ஆமாமா... பெருசா பெத்துட்டா... ஊர் உலகத்துல எவளும் பெத்துக்கலியா?

- இப்படியே தாய் மகளுக்கு இடையே சண்டை நீண்டு கொண்டே போகும். இதேபோல நம்மில் பலரும் தாயிடம் சண்டை போட்டிருக்கலாம். அப்படி சண்டை போட்டவர்களுக்காகவும், இனி இதுபோல யாரும் தாயைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்கக்கூடாது என்பதற்காகவும்தான் இந்த பதிவு...!

ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் எனது மனைவியின் வயிற்றில் ஒரு சிசு உருவான நாள் முதல் அந்த சிசு இந்த பூவுலகை கண் விழித்து பார்த்த நாள் வரை 9 மாதம் 9 நாட்கள் (பத்து மாசம்னு சொல்வழக்கு இருந்தாலும் 9 மாசம் 9 நாள்தான் குழந்தை தாயின் கருவறைக்குள் இருக்கும்) என்னென்ன கஷ்டப்பட்டாள் என்பதை நேரில் பார்த்ததற்கு பிறகு இனி என் தாயிடம் எந்த விஷயத்திலும் கோபப்படக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

ஆம் நண்பர்களே..! ஒரு ஆணால் செய்ய முடியாத காரியங்களில் குழந்தையை வயிற்றில் சுமந்து குழந்தையை பெற்றெடுப்பது ஒன்று. ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவான நாள் முதல் அவள் தன்னையும் அறியாமல், வயிற்றில் வளரும் சிசு மீது ஒரு தனிக்கவனம் செலுத்தத் தொடங்குகிறார். கரு உருவான இரண்டாவது மாத இறுதியில் இருந்து அந்த பெண்ணால் சரியாக சாப்பிட முடியாது. எந்த உணவை சாப்பிட்டாலும் குமட்டும். சாப்பிட்ட ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் அந்த உணவு வாந்தியாக வெளியே வந்து விடும். இந்த குமட்டல் 6 அல்லது 7 மாதங்கள் வரையோ... சிலருக்கு குழந்தை பிறக்கும் நாள் வரையிலோ நீடிக்கலாம்.

குமட்டல் முதல் பிரச்சினை என்றால் குழந்தை வளர வளர வயிறு பெரிதாகும். அந்த சமயத்தில் அவர்களால் நிம்மதியாக படுத்துறங்க முடியாது. நான்காவது மாதம் முதல் வயிறு பெரிதாகத் தொடங்கும். அன்று முதல் குழந்தை பிறக்கும் நாள் வரை அவர்களால் எந்த பக்கத்தில் சாய்ந்து படுத்தாலும் வயிற்றில் வலி ஏற்படுமாம். அதுவும் ஏழாவது மாதம் முதல் குழந்தைக்கு வசதிப்படும் வகையில்தான் படுக்க முடியும். அப்படி நேர்மாறாக படுத்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை எட்டி உதைக்கத் தொடங்கி விடும். அந்த சுகமான அனுபவத்துக்காக ஏங்கி காத்திருப்பாள் அந்த தாய்.

கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை பிறக்கும் நாள் நெருங்கி விட்டால், அந்த தாயின் மனதில் பயம் தொற்றிக் கொள்ளும். எத்தனை எத்தனையோ நம்பிக்கைகளை அவர்கள் மனதில் புகுத்தினாலும், ஒருவித பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். குழந்தை எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம், நல்லபடியாக நார்மலாக குழந்தை பிறக்குமா என்ற கேள்வி வேறு மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். பிறக்கும் குழந்தை எந்தவித குறைபாடும் இன்றி பிறக்க வேண்டும் என்ற வேண்டுதல் ஒரு பக்கமென்றால், குழந்தை பிறந்த பிறகு அதனை எப்படி வளர்ப்பது என்ற டென்ஷன் இன்னொரு புறம் என மனதை குழப்பிக் கொண்டேதான் இருக்கும்.

ஒருவழியாக நார்மலாகவோ, சிசேரியன் ஆபரேஷன் மூலமாகவோ குழந்தை பிறந்து, குவா குவா சத்தம் காதில் விழுந்த பின்னர்தான் அந்த தாய் நமக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து விட்டது என நினைத்து பூரிக்கிறாள்.

குழந்தை பிறக்கும் தருவாயில் பெரும்பாலான பெண்கள் மயக்க நிலைக்கு சென்று விடுவார்களாம். அந்த அரை மயக்கத்திலும் தாயை எழுப்பி, குழந்தையின் முகத்தை காட்டி விட்டுதான் டெலிவரி ரூமில் இருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவார்கள் மருத்துவமனை செவிலியர்கள்.

இப்படி உண்ணாமல், உறங்காமல் பெற்றெடுத்து, வளர்த்த (குழந்தை வளர்க்கும்போது ஏற்படும் சந்தோஷங்கள் மற்றும் சிரமங்களை வேறொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்) குழந்தை வளர்ந்து பெரிய ஆளான பின்னர் என்னை ஏன் பெற்றாய் என்று கேட்டால், அந்த தாயின் மனது எவ்வளவு கஷ்டப்படும் என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

எனக்கு கல்யாணம் முடிந்து ஒரு குழந்தைக்கு அப்பாவான பின்னரும் என் தாய்க்கு இன்னமும் நான் குழந்தையாகவே தெரிகிறேன் என்பதை அவர்கள் எனக்கு போனிலும், நேரில் செல்லும்போதும் சொல்லும் அட்வைஸ்களில் இருந்தே நெரிந்து கொள்ளலாம். வேலாவேளைக்கு நன்றாக சாப்பிடு, உடம்பை பார்த்துக் கொள், ரோட்டை கிராஸ் பண்ணும்போது பார்த்து போகணும், வண்டியில் வேகமா போகாதே என்று சின்ன பையனுக்கு சொல்வது போல இன்னமும் எனக்கு அட்வைஸ் மழையை பொழிந்து கொண்டிருப்பார்கள்.

என்றென்றும் பிள்ளைகளுக்காக வாழும் அந்த மனித தெய்வத்தைத் பார்த்து, என்னை ஏன் பெற்றாய்? என்று கேட்பதை இனியும் தொடராதீர்கள் நண்பர்களே!!!

23 comments:

உண்மைத்தமிழன் said...

அருமையான பதிவு நண்பரே..

படித்து முடித்துவிட்டு இதில் சொல்லியிருப்பது போல் எத்தனை முறை எனது தாய், தந்தையை நான் உதாசீனப்படுத்தி, அவமானப்படுத்தியிருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்து வேதனைப்பட்டேன்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//என்றென்றும் பிள்ளைகளுக்காக வாழும் அந்த மனித தெய்வத்தைத் பார்த்து, என்னை ஏன் பெற்றாய்? என்று கேட்பதை இனியும் தொடராதீர்கள் நண்பர்களே!!! //

அரை சதமடித்து விட்டேன். ஆனாலும் அந்த அரவணைப்புக்கு ஏங்குகிறேன்.
அருமையான அனுபவ ஆக்கம்.

யாழிபாபா said...

very good one

லொல்லு சபா said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அருமையான பதிவு நண்பரே..//

நன்றி உண்மைத் தமிழன்.


//படித்து முடித்துவிட்டு இதில் சொல்லியிருப்பது போல் எத்தனை முறை எனது தாய், தந்தையை நான் உதாசீனப்படுத்தி, அவமானப்படுத்தியிருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்து வேதனைப்பட்டேன்../

வேதனைப்படுவதோடு நிறுத்தி விடாமல் இனி அதுபோல உதாசீனப்படுத்தாமல் இருங்கள் நண்பர்களே...! உங்களுக்கு எப்போதாவது இனி கோபம் வரும்போது லொல்லு சபாவின் இந்த பதிவு நினைவுக்கு வரும் என நம்புகிறேன்.

லொல்லு சபா said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அரை சதமடித்து விட்டேன். //

முழு சதமும் அடிக்க வாழ்த்துக்கள் நண்பரே..!

//அரவணைப்புக்கு ஏங்குகிறேன்.//

உங்கள் ஏக்கம் (ஆசை) கண்டிப்பாக இன்றில்லாவிட்டாலும் என்றாவது நிறைவேறும்.


//அருமையான அனுபவ ஆக்கம்.//

நன்றி யோகன்!

ஊர்சுற்றி said...

நச்சுன்னு குட்டுறமாதிரி ஒரு இடுகை...!

லொல்லு சபா said...

//yalibaba said...

very good one
//

நன்றி யாலிபாபா...!

லொல்லு சபா said...

கருத்துக்கு நன்றி ஊர்சுற்றி...!

selva said...

vry good post i live my mother

Unknown said...

I had an experience, no words to say the period 9 months and 9 days.

Unknown said...

Very Good Post.

லொல்லு சபா said...

நன்றி selladurai!

அவன்யன் said...

அருமையான அதே நேரத்தில் உணர்வுபூர்வமான பதிவு நண்பரே,
என் தாய் நான் கல்லூரி பயிலும் போதே இறந்து விட்டார். ஆனால் இன்று நான் அனுபவிக்கும் என் பதவி, என் கல்வி தகுதி மொத்தமும் அவர் மூலமாக தான். தாய் என்ற சொல்லை எழுதும் போதோ இல்லை கேட்கும் போதோ நினைக்கும் போதோ என் கண்களில் தானாக ஈரம் வருகிறது. என் தாய் இறந்த பிறகு என் கடைசி அக்கா தான் என்னை படிக்க வைத்தார். அதற்காக அவர் தன திருமணத்தை கூட தள்ளி இட்டவர். அவரும் ஒரு தாய் தான் என்னை பொறுத்த மட்டில்.

naanum kadavul said...

ஹா ஹா நண்பரே உங்கள் பதிவு ரொம்ப அருமை.நான் மெய்சிலிர்த்தேன்.நான் என் தாய் தந்தையை இப்படி தான் கேட்பேன்.இப்பொழுது என் மனைவி படும் வேதனைகளை பார்த்து புரிந்து கொண்டேன்.

குறிப்பாக;
ஏழாவது மாதம் முதல் குழந்தைக்கு வசதிப்படும் வகையில்தான் படுக்க முடியும். அப்படி நேர்மாறாக படுத்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை எட்டி உதைக்கத் தொடங்கி விடும். அந்த சுகமான அனுபவத்துக்காக ஏங்கி காத்திருப்பாள் அந்த தாய்.

உண்மையாகவே என் கண்களில் கண்ணீர்.ஏன் என்று தெரியவில்லை.உங்கள் பதிவு அருமை வாழ்த்துகள்.

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

கிரி said...

செந்தில்

கலக்கிட்டீங்க..அருமையான பதிவு.

வார்த்தைகளை விடுவது சுலபம் ஆனால் அது மற்றவர்களை எத்தனை காயப்படுத்தும் என்று அறியும் போது..பயனற்றதாகி விடுகிறது.

உங்கள் பதிவு இதை போல நடந்து கொள்கிறவர்களுக்கு "சுருக்" னு இருக்கும் ...மற்ற பதிவுகளையும் விரைவில் எழுதுங்கள்

கிரி said...

//எனக்கு கல்யாணம் முடிந்து ஒரு குழந்தைக்கு அப்பாவான பின்னரும் என் தாய்க்கு இன்னமும் நான் குழந்தையாகவே தெரிகிறேன் என்பதை அவர்கள் எனக்கு போனிலும், நேரில் செல்லும்போதும் சொல்லும் அட்வைஸ்களில் இருந்தே நெரிந்து கொள்ளலாம். வேலாவேளைக்கு நன்றாக சாப்பிடு, உடம்பை பார்த்துக் கொள், ரோட்டை கிராஸ் பண்ணும்போது பார்த்து போகணும், வண்டியில் வேகமா போகாதே என்று சின்ன பையனுக்கு சொல்வது போல இன்னமும் எனக்கு அட்வைஸ் மழையை பொழிந்து கொண்டிருப்பார்கள்.//

இதை போல நானும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்

லொல்லு சபா said...

//அவன்யன் said...

அருமையான அதே நேரத்தில் உணர்வுபூர்வமான பதிவு நண்பரே//

நன்றி அவன்யன்!

//என் தாய் நான் கல்லூரி பயிலும் போதே இறந்து விட்டார். ஆனால் இன்று நான் அனுபவிக்கும் என் பதவி, என் கல்வி தகுதி மொத்தமும் அவர் மூலமாக தான். தாய் என்ற சொல்லை எழுதும் போதோ இல்லை கேட்கும் போதோ நினைக்கும் போதோ என் கண்களில் தானாக ஈரம் வருகிறது//

உங்கள் கண்ணீரிலும், கலக்கத்திலும் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். உங்கள் தாய் இன்று நம் பூவுலகில் இல்லையே தவிர... அவர்களது ஆசிதான் இன்று உங்களை இந்த அளவுக்கு உயர வைத்திருக்கிறது என்பதை என்றென்றும் மறந்து விடாதீர்கள் நண்பரே...!

//என் தாய் இறந்த பிறகு என் கடைசி அக்கா தான் என்னை படிக்க வைத்தார். அதற்காக அவர் தன திருமணத்தை கூட தள்ளி இட்டவர். அவரும் ஒரு தாய் தான் என்னை பொறுத்த மட்டில்.//

உங்களைப் பொறுத்த வரை அக்காவும் ஒரு தாய்தான்...! இன்று நல்ல நிலைமையில் இருக்கும் தாங்கள் தங்கள் தாய்க்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ.. அதை உங்கள் அக்காவுக்கு செய்யுங்கள்...!

லொல்லு சபா said...

//naanum kadavul said...

உண்மையாகவே என் கண்களில் கண்ணீர்.ஏன் என்று தெரியவில்லை.உங்கள் பதிவு அருமை வாழ்த்துகள்.//

நன்றி நண்பரே...!

லொல்லு சபா said...

//கிரி said...

செந்தில் கலக்கிட்டீங்க..அருமையான பதிவு.//

நன்றி கிரி!!!

//உங்கள் பதிவு இதை போல நடந்து கொள்கிறவர்களுக்கு "சுருக்" னு இருக்கும்...//

'சுருக்னு இருக்கிறதுக்காக இத எழுதல கிரி...! கண்டிப்பா இத படிச்சதுக்கு அப்புறம் ஒன்றிரண்டு பேராவது தம் தாய்‌‌ப் பார்த்து ஏன் என்னை பெற்றாய்? என கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது இந்த பதிவு.

//மற்ற பதிவுகளையும் விரைவில் எழுதுங்கள்//

கண்டிப்பாக...! தொடருங்கள்...! எழுதிக் கொண்டே இருப்பேன்...!

//இதை போல நானும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்//

உங்க பதிவ படிச்சாச்சு...! பர்ஸ்ட் கமெண்டும் போட்டாச்சு...! ஓ.கே.!

Unknown said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Ganeshkumar said...

Realy good ma.

vaasu said...

இப்போது என் மனைவிக்கு 4வது மாதம். உண்மையில் என் அம்மா பட்ட கஷ்டம் எனக்கு இப்போதுதான் எனக்கு புரிகிறது..
நீங்கள் சொல்லும் தகவல்கள் 100% உண்மை.

Post a Comment

உங்கள் கருத்துக்களை நாகரீகமான முறையில் தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்.