டாக்டர் ராமதாஸ் பாணியில் இளையதளபதி விஜய்
ரஜினி ரசிகர்களாக இருக்கட்டும், கமல் ரசிகர்களாக இருக்கட்டும், விக்ரம் ரசிகர்களாக இருக்கட்டும், விஜயகாந்த் ரசிகர்களாக.. சாரி... தொண்டர்களாக இருக்கட்டும் எல்லாத்துக்கு பிடிக்காத ஒரே அரசியல் கட்சி தலைவர் யாரென்று கேட்டா.... டாக்டர் ராமதாஸ் என்று டக்குனு சொல்லலாம். (அப்ப.. இந்த தலைவர்களுக்கெல்லாம் ராமதாஸ பிடிக்குமான்னு ஏடாகூடமான கேள்வியெல்லாம் கேட்கப்படாது).
சினிமாத்துறை இந்த ராமதாஸ் கொஞ்சம் நெஞ்சமா வாரித் தள்ளியிருக்கார். இவர் ஒருபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களை நேரடியாக, பகிரங்கமாக விளாசித் தள்ள... இவரது மகன் அன்புமணி ராமதாஸ் (முன்னாள் மத்திய அமைச்சர்) இன்னொரு புறம் இந்திய சினிமாவையே புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது ஒரு காலம்...!
ஆனா... இப்ப அதுவல்ல மேட்டர்...!
ஜூன் 22ம் தேதி தமிழகத்தில் இன்னொரு கட்சி முளைக்கப் போறதா தகவல்கள் இணைய உலகிலும், பத்திரிகை உலகிலும் உலாவிக்கிட்டு இருக்கு. அந்த உலாவல்லயே இன்னொரு தகவலும் சொல்றாங்க. அதாகப்பட்டது... இளையதளபதி தான் ஆரம்பிக்கப் போற கட்சிக்கு நிறுவன தலைவரா மட்டும் (இப்ப புரியுதா ராமதாஸ் பாணின்னு ஏன் சொன்னேன்னு) இருப்பாராம். மற்ற எல்லா வேலைகளையும் தளபதியோட அப்பா சந்திரசேகரும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் சேர்ந்து கவனிச்சுக்கப் போறாங்களாம்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பிச்சு... அடுத்த சட்டசபை தேர்தல்ல நின்னு ஜெயிச்சிட்டா... தமிழ்நாட்டோட கதி என்ன ஆகும்னு யாருக்காவது யூகிக்க முடியுதா? அப்படி யூகிக்கிற விஷயத்தை பின்னூட்ட பொட்டியில போட்டு அலசுங்க மக்கா!
7 comments:
// விஜய் அரசியல் கட்சி ஆரம்பிச்சு... அடுத்த சட்டசபை தேர்தல்ல நின்னு ஜெயிச்சிட்டா... //
உங்களுக்கு பிஞ்சு மனசு போல.
ஆசை நூறு வகை ;
//விஷ்ணு. said...
உங்களுக்கு பிஞ்சு மனசு போல.//
கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க விஷ்ணு.
//யூர்கன் க்ருகியர்..... said...
ஆசை நூறு வகை ;//
அதுல இதுவும் ஒரு வகைனு சொல்ல வர்றீங்களா யூர்கன் க்ருகியர்.
//விஜய் அரசியல் கட்சி ஆரம்பிச்சு... அடுத்த சட்டசபை தேர்தல்ல நின்னு ஜெயிச்சிட்டா... தமிழ்நாட்டோட கதி என்ன ஆகும்னு யாருக்காவது யூகிக்க முடியுதா? //
உங்க கற்பனையை .....கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்
என் கற்பனையை புகழ்ந்த கிர்ர்ர்ர்ரீக்கு நன்றி!
Great comedy
Post a Comment
உங்கள் கருத்துக்களை நாகரீகமான முறையில் தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்.